அமர்சிங்குக்கு ஏதாவது நேர்ந்தால் சமாஜ்வாடிதான் பொறுப்பு - ஜெயப்பிரதா
டெல்லி: அமர்சிங்கின் தோழியும், தீவிர ஆதரவாளருமான ஜெயப்பிரதா, அமர்சிங் நீக்கம் தொடர்பாக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால், அவரது எதிர்ப்பாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அமர்சிங்கின் நெருங்கிய தோழியும், சமாஜ்வாடிக் கட்சியின் ராம்பூர் தொகுதி எம்.பியுமான ஜெயப்பிரதா, அமர்சிங்கின் நிழல் போல கூடவே இருப்பவர்.
அமர் சிங் விலகலைத் தொடர்ந்து அவர் கருத்துக் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையி்ல் நேற்று அவர் வாய் திறந்தார்.
அமர்சிங் எதிர்ப்பாளர்களை அவர் கடுமையாக சாடினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்பிரதா,
அவருக்கு (அமர்சிங்) ஏதாவது நேர்ந்தால், அவரை யாரெல்லாம் எதிர்த்தார்களோ, குறி வைத்தார்களோ அவர்களே பொறுப்பாவார்கள்.
நான் கட்சியை விட்டு விலகும் முடிவில் இப்போது இல்லை. அந்த எண்ணமும் எனக்கு இப்போதைக்கு இல்லை.
அமர்சிங்கை வெட்கம் கெட்டவர், பைத்தியக்காரர் என்றெல்லாம் விமர்சித்த மோகன் சிங்கை பொதுச் செயலாளராக்கியுள்ளார் முலாயம் சிங் யாதவ். எனவே மோகன் சிங்கின் நடவடிக்கைகளை அவர் கண்காணித்து வர வேண்டும்.
அமர்சிங்கும், நானும் சேர்ந்து லோக் மஞ்ச் என்ற மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அந்தப் பணி தொடரும். அது அரசியல் சார்பற்ற, மக்கள் சேவைப் பணியாகும். எனவே அதில் நாங்கள் இணைந்து செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது.
அதேபோல உ.பி மாநிலத்தைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற அமர்சிங்கின் கோரிக்கையையும் நான் ஆதரிக்கிறேன் என்றார் ஜெயப்பிரதா.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications