தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்
சென்னை: தமிழ்நாட வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து அவர் புகார் மனு கொடுத்தார்.
அவருடன் பெரும் திரளான வக்கீல்களும் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரபாகரன் பேசுகையில்,
புதன்கிழமை இரவு 8 மணி அளவில் எனது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.
மதுரவாயல் நில பிரச்சினை தொடர்பான வழக்கில் இருந்து விலகாவிட்டால் உன்னை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்றும், இதற்காக மதுரையில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம் என்றும் அந்த மர்ம நபர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
இதுபோன்ற புகார் மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் கொடுத்துள்ளேன். போலீஸ் டி.ஜி.பி.க்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவராக முன்பு இருந்தவர் பிரபாகரன்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் நடந்த கடும் மோதலுக்குப் பின்னர் வக்கீல்கள் சங்க முக்கிய நிர்வாகி ஒருவர் ஆணையர் அலுவலகம் வந்தது இதுவே முதல் முறை என்பதால் ஒரு விதமான இறுக்க நிலை காணப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications