2 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் - அமெரிக்கா

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கை, முன்பை விட விட தற்போது 7 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2000 மற்றும் 2007ம் ஆண்டுவாக்கில் சட்டவிரோதமானவர்களின் எண்ணிக்கை 33 லட்சம் அதிகரித்து ஒரு கோடியே 18 லட்சம் என்ற அளவுக்கு இருந்தது.
ஆனால் 2009ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சமாக குறைந்தது. ஆனால் சட்டவிரோதமான இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட 2009ல் அதிகரித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் மெக்சிகர்கள்தான்.
சுமார் 67 லட்சம் மெக்சிகோவினர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications