வைர மோதிரம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டி அதிகாரிக்கு 'கல்தா'!
டெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் துபாயில் இருந்து விலை உயர்ந்த வைர மோதிரம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு அதிகாரி காலவரையற்ற விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
துபாயைச் சேர்ந்த நகை நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் மணி. இவர் கடந்த புதன்கிழமை துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ரூ.28 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த மோதிரத்தை காமன்வெல்த் போட்டிகளின் ஒருங்கிணைப்பு கமிட்டி இணை இயக்குனர் டி.ஆர்.துர்பாரிக்காக எடுத்துச் செல்வது தெரிந்தது.
துர்பாரிக்கு அவர் ஏன் வைர மோதிரத்தை வாங்கி வந்தார்? இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை முடியும் வரை துர்பாரியை விடுப்பில் இருக்குமாறு காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைமை அதிகாரி ஜர்னல் சிங் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications