ஏப். மாதம் 2 செயற்கைக் கோள்கள் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்
குளச்சல் வருகிற ஏப்ரல் மாதம் 2 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் முட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), சென்னை சத்திய பாமா பல்கலைக்கழகம், கிராமப்புற ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடமாடும் தொலை தொடர்பு மருத்துவ சேவை திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்திற்கான பஸ் நேற்று இயக்கப்பட்டது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், சத்தியபாமா பல்கலை கழக துணைவேந்தர் ஜேப்பியார் ஆகியோர் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தொலை கல்வி-மருத்துவத்திற்கு கார்ட்டோ சாட்டிலைட் 2பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுததப்படும்.
அதேபோல, தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள் பெங்களூரில் உள்ள செயற்கை கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்.
சத்தியபாமா பல்கலை மாணவர்களும், இஸ்ரோவும் இணைந்து உருவாக்கும் நேனோ செயற்கை கோள் பணி முடிந்து விட்டது. வரும் ஜூன், ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த நடமாடும் பஸ்ஸுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 67 பெரிய மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சத்தியபாமா பல்கலைக் கழகம் சார்பில் ஒரு டாக்டர் மற்றும் இரண்டு நர்சுகளும், இஸ்ரோ சார்பில் இரண்டு டெக்னீஷியன்களும் இதில் இடம் பெறுவர்.
இந்த வேன், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications