நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கானா வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்- டெல்லி போலீஸை ஏமாற்றி நுழைந்தனர்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்திற்கு வெகு அருகே சென்று தெலுங்கானா பகுதி வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி போலீஸாரின் தீவிர கண்காணிப்பை மீறி, கருப்புக் கோட்டை கழற்றியபடி உள்ளே நுழைந்து பின்னர் கோட்டை மாட்டிக் கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பாகி விட்டது.
தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களின் வக்கீல்கள் சங்கத்திலிருந்தும் ஏராளமான பிரதநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலில் அனுமதிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வக்கீல் உடையை களைந்து விட்டு சாதாரண உடையில் தனித் தனி குழுவாக பிரிந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர்.
நாடாளுமன்றத்தை நெருங்கியதும் மீண்டும் கருப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு முழக்கமிட்டபடி நாடாளுமன்ற அனெக்ஸ் கட்டடத்தை நோக்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களை வக்கீல்கள் ஏமாற்றி உள்ளே புகுந்து விட்டதை உணர்ந்து கொண்டு சுதாரித்த டெல்லி போலீஸார் விரைந்து சென்றனர். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலுக்கு 100 மீட்டர் தொலைவில் வக்கீ்ல்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர் வக்கீல்கள். இதையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அமைதியான முறையி்ல் கலைந்து போகச் செய்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications