உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்- சேதாரம் இல்லை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் பாகேஷ்வர் பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.7 என பதிவான இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.54 மணிக்கு ஏற்பட்டதாக இந்திய பூகம்பவியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.

உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வர் பகுதியில் பல இடங்களில் பூகம்ப அதிர்வுகள் உணரப்பட்டது.
இதனால், இரவு நேரத்தில் சில இடங்களில் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெறியேறனர்.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் சேதாரம் எதுவும் ஏற்படவில்லை.

ஹைத்தியில் மீண்டும்...:

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தால் பேரழிவில் இருந்து இன்னும் மீளாத ஹைத்தி தீவுப் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஹைத்தி தலைநகர் போர்ட்டா பிரின்ஸில் இருந்து தென்மேற்கே 20 மைல் தொலைவை மையமாகக் கொண்டு செவ்வாய் காலை 6.26 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 என பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+