ஜனாதிபதியின் இந்தி உரை-ஆங்கில மொழிபெயர்ப்பு ​இல்லை

Subscribe to Oneindia Tamil

Prathiba Patil
டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இந்தியில் ஆற்றிய உரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை.

இதற்கு திமுக அமைச்சர்கள் ராசா,​​ தயாநிதி மாறன் உள்பட திமுக ​எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வழக்கமாக நாடாளுமன்றத்தில் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசப்படும் உரைகள், அமைச்சர்களின் பேச்சுக்கள் ​உடனுக்குடன் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும்.

இதனால் இந்தி, ஆங்கிலம் தெரியாத அமைச்சர்கள், எம்பிக்களுக்கு அந்த பேச்சின் விவரம் புரியும்.

ஆனால், நேற்று ஜனாதிபதி இந்தியில் உரையாற்ற அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை.​

இது குறித்து திமுக எம்.பியான டி.கே.எஸ்.​ இளங்கோவன் கூறுகையில், இந்த பிரச்சனை குறித்து திமுக எம்.பிக்கள் மக்களவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்து புகார் தெரிவித்தனர். அமைச்சர்கள் ராஜாவும் தயாநிதி மாறனும் அப்போது உடனிருந்தனர் என்றார்.

இந்தியை தூக்கி தலையில் வைத்தும் ஆடும் ​இவர்களால் தான் பால் தாக்கரே போன்றவர்கள் எல்லாம் பலம் பெறுகிறார்கள்.

உரையில் சில முக்கிய அம்சங்கள்...

நேற்று பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரையில் இடம் பெற்ற சில முக்கிய அம்சங்கள்...

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணு மின் உற்பத்தியில் ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

2008-09ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது.​ 2009-10-ம் ஆண்டில் வளர்ச்சியை 7.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் எவரும் பட்டினியால் வாடாதபடி உணவுக்கு உத்தரவாதம் வழங்கப்படும்.

2010-11-ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ​(ஜி.டி.பி.)​ ​ 8 சதவீதத்துக்கு மேல் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.​ 2011-12ல் இது 9 சதவீதமாக அதிகரிக்கும்.

மத வன்முறையை தடுப்பது,​​ மத வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான சட்டத்துக்கு நடப்பு கூட்டத் தொடரில் ஒப்புதல் வழங்கப்படும்.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை நிர்வகிக்க உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் விரைவில் நிறுவப்படும்.

லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களில் 10 சதவீதப் பங்குகள் விற்பனை செய்யப்படும்.

ராஜீவ் காந்தி கிராம எரிவாயு வித்ரக் யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் தடையின்றி எரிவாயு கிடைக்க நடவடிக்கை.

நீதிமன்றங்கள் மூலம் நியாயமாகவும்,​​ விரைவாகவும் தீர்ப்புகள் கிடைக்க தேசிய அளவில் நீதித்துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

பன்றிக் காய்ச்சல் நோயைப் பரப்பும் எச்1என்1 வைரஸுக்கான தடுப்பு மருந்து இந்த ஆண்டில் கிடைக்கும்.

அகில இந்திய வானொலி,​​ தூர்தர்ஷனின் ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+