பென்னாகரம் இடைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் அன்பழகன்

இவர் தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.
இத் தொகுதியில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 3ம் தேதி தொடங்குகிறது.
இந் நிலையில் இந்தத் தொகுதியில் அன்பழகன் போட்டியிடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஆர். அன்பழகன் நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பணிக்குழு தலைவராக தம்பிதுரை:
மேலும் பென்னாகரம் தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவராக தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன் பிறப்புகள் தேர்தல் பணிக்குழு தலைவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அன்பழகன் இப்போது பென்னாகரம் யூனியன் கவுன்சிலராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications