மம்தாவிடம் கணக்கு கேட்கிறார் லாலு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே பட்ஜெட்டை தயாரிக்க உபயோகித்த கணக்கு வழிமுறையை மம்தாவிடம் கேட்கிறார் முன்னாள் ரயில்வே மந்திரி லாலு பிரசாத் யாதவ்.

சில மாதங்களுக்கு முன்பு லாலு பிரசாத்தை கடுமையாக கேள்வி கேட்டு மடக்கினார் மம்தா. லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது கணக்கு வழக்குகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் அவர் தவறான தொகையை ரயில்வே இருப்பு நிதியாகக் காட்டிவிட்டார் என்றும் கூறியிருந்தார் மம்தா.

மக்களை லாலு தவறாக திசை திருப்பிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார் மம்தா.

ஆனால் பின்னர் மம்தாவின் குற்றச்சாட்டில் ஆதாரமில்லை என்று தெரியவந்தது.

இப்போது லாலுவின் முறை.

அவர் மம்தாவிடம் கணக்கு கேட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தயாரிக்க மம்தா எந்த கணக்கு முறையைப் பயன்படுத்தினார் என்ற முழு விவரமும் தங்களுக்கு தந்தாக வேண்டும் என்று லாலு கேட்டுள்ளார்.

"நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது உபயோகித்த கணக்கு முறை பற்றியெல்லாம் என்னைக் கேட்டு துளைத்தெடுத்தார் மம்தா பானர்ஜி. இப்போது அவர் என்ன கணக்கு முறையை உபயோகிக்கிறார்? கடந்த ஆண்டு நான் போட்ட பட்ஜெட் அடிப்படையில்தான் இப்போதும் போட்டுள்ளாரா என்பது தெரிய வேண்டும்.." என்று கூறியுள்ளார் லாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+