தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பு- வரும் கல்வியாண்டில் அறிமுகம்

முதல்கட்டமாக கட்டுமான பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இயந்திர பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) ஆகிய படிப்புகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள நான்கு அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ் இயங்கும் 14 கல்லூரிகளில் இந்த பட்டப்படிப்புகள் அறிமுகமாகின்றன.
இதற்காக வரும் கல்வியாண்டில், இந்த குறிப்பிட்ட கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 800 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் வழியில் ஆரம்பக்கல்வி பயிலும் கிராமப் பகுதிகளில் உள்ள மாணவர்கள், தொழில்நுட்ப ஆர்வமும், திறமையும் கொண்டிருந்தாலும் ஆங்கில அறிவு இல்லாத ஒரே காரணத்தால் முடங்கிப்போய்விடும் சூழ்நிலையை மாற்றுவதற்கு தமிழ் வழியில் உயர்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என பரவலாக கருத்து நிலவி வந்தது.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான பாடத் திட்டங்கள், கலைச்சொல் உருவாக்கம் என இதற்கான பல்வேறு பணிகளும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முதல்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்புக்கு தேவையான தமிழ் வழி பாடத்திட்டங்கள் மற்றும் கலைச்சொற்களை வடிவமைக்கப்பட்டு, பாடங்கள் நடத்த தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன், உயர்கல்வி ஆணையத்தின் துணைத்தலைவர் ராமசாமி மற்றும் அண்ணா பல்கலை துணைவேந்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பை நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் கல்வி ஆண்டு முதல் கட்டுமான பொறியியல் மற்றும் இயந்திர பொறியியல் பட்டப்படிப்புகள் தமிழ் வழி நடத்தப்படும்' என அறிவித்தார்.
மேலும், அண்ணா பல்லைக்கழகம் மற்றும் உருப்புக்கல்லூரிகளில் மட்டுமல்லாது, அகில இந்திய கல்வி ஆணையத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பொறியியல் பட்டபடிப்பு பாடங்களை நடத்த அவர்கள் விரும்பினால் நடத்தலாம்.
அனைத்து கல்லூரிகளிலும் தமிழில் தேர்வு நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென தனியாக கல்வி கட்டணம் ஏதும் இல்லை. தமிழ் வழியில் பொறியியல் பட்டப்படிப்பை படிக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் இதில் சேரலாம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்.
இந்த தமிழ் வழி பொறியியல் பாடப்புத்தகங்களை உருவாக்குவதற்கென நான்கு துணைவேந்தர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் முதல் ஆண்டுக்குரிய புத்தகங்களை தயாரிப்பார்கள். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பாடப்புத்தகங்களையும் அவர்கள் உருவாக்குவார்கள்.
இதே போல, பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கட்டுமானம் மற்றும் எந்திரவியல் பொறியியல் பாடம் தமிழ் வழியில் பயிற்றுவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் வழியில் பாடத்திட்டங்கள் இருந்தாலும், ஆங்கில பேசுப்பயிற்சி முக்கியம் என்பதால் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பேச்சுப்பயிற்சியும் வழங்கப்படும். செமஸ்டர் தேர்விலும் அது இடம் பெறும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications