கட்சித் தலைவர்களின் போக்குவரத்து- வேட்பாளர் செலவு கணக்கில் வராது
சென்னை: தேர்தல் பிரசாரத்துக்காக தொகுதிக்கு செல்லும் அரசியல் கட்சி தலைவர்களின் போக்குவரத்து செலவை அந்தந்த கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கத் தேவையில்லை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'தேர்தல் பிரசாரத்துக்காக தொகுதிக்கு செல்லும் அரசியல் கட்சி தலைவர்களின் போக்குவரத்து செலவை (விமானம் உள்பட), அந்தந்த கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கத் தேவையில்லை.
ஆனால் அதற்கென்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த வகையில், அங்கீகரிக்கப்படாத 20 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சி தலைவர்களுக்கு, இந்த சலுகையை நிபந்தனையுடன் அளிக்க வகை செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களின் பெயரை தெரிவித்திருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை மார்ச் 3ம் தேதி வெளியிடப்படுகிறது. எனவே போக்குவரத்து செலவை தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க விரும்பாதவர்கள், தங்கள் அரசியல் கட்சி மற்றும் தலைவர்களின் பெயரை மார்ச் 10ம் தேதிக்கு முன்பாக இந்திய தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.
பெயர் வந்து சேரப்பெற்ற கட்சி தலைவர்களின் போக்குவரத்து செலவு தவிர, பிரசாரத்துக்கு ஆகும் மற்ற அனைத்து செலவுகளும், அந்த கட்சியின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications