திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு ரூ.200 கோடி

ஒரே தவணையாக இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஜவுளி சாயப்பட்டறைகளில் தொழிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தன.
இதற்காக பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக தமிழக அரசு ஏற்கனவே ரூ.120 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர்கள் மாநாட்டின் போது, நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜியை சந்தித்து இத்திட்டத்துக்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் அறிவிக்கையில்,
'திருப்பூர் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை திட்டத்துக்கு ஒரே தவணையாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும்' என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications