ஹரியானாவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்படுகிறது!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஹரியானாவில் விரைவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயில் அமைய உள்ளது.
இதற்காக அரியானா அரசு குருஷேத்திரா பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தான பணிக்காக இலவசமாக தர முன்வந்துள்ளது. இந்த நிலத்தின மதிப்பு ரூ.12.5 கோடி.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு, நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ் ஆகியோர் அரியானா முதல்வர் பூபேந்திரசிங் கூடாவை சந்தித்து பேசினார்கள்.
அப்போது பூபேந்திரசிங், ஹரியானாவில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்தார். அடுத்த மாதம் 15ம் தேதி தேவஸ்தான வாஸ்து நிபுணர்கள் குருஷேத்திரா சென்று கோவில் கட்டிட அமைப்பு பற்றி ஆலோசனை நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications