ரூ.45 லட்சத்தில் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடு
Subscribe to Oneindia Tamil
வி.கே.புரம்: மணிமுத்தாறு அருகே ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை சபாநாயகர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு நெல்லை சமூக சேவா சங்கம் சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 46 வீடுகளும், சிஆர்எஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பீல் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணை கலெக்டர் வீரராகவன் முன்னிலை வகித்தார். சிஆர்எஸ் ஜோமி ஜோசப் வீடுகளை அரசிடம் ஓப்படைத்தார். சபாநாயகர் ஆவுடையப்பன் வீடுகளை திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications