ஆலடி அருணா வழக்கு: எஸ்.ஏ ராஜா மீண்டும் சிறையில் அடைப்பு
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் எஸ்.ஏ ராஜா, மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் நேற்று மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அரு்ணா கொலை வழக்கில் வடக்கன்குளம் எஸ்.ஏ ராஜா, நெல்லை பாலமுருகன், அழகர், ஆறுமுகம், வேல்துரை ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஏ ராஜா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.ஏ.ராஜா பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் எஸ்ஏ ராஜாவுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் கடந்த 22ம் தேதி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிக்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ராஜா மீண்டும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications