ஜெ. பிறந்த நாள் - காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு சுமங்கலி பூஜை

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி ஆண்டு தோறும், அவர் பிறந்த மகம் நட்சத்திர நாளில், காளிகாம்பாள் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

18-வது ஆண்டாக இந்த ஆண்டில் திருவிளக்கு பூஜை நடத்த மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்து இருந்தார்.

அதன்படி இன்று காலை காளிகாம்பாள் கோவிலில் ஜெயலலிதா நீடுழி வாழவேண்டி சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினார்கள். சுயஉதவி குழுக்களை சேர்ந்த 1062 பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்து பூஜையில் கலந்து கொண்டார்.

பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு சேலை, ஜாக்கெட், காமாட்சி அம்மன் விளக்கு, டிபன் பாக்ஸ், குங்குமச்சிமிழ், மஞ்சள் குங்குமம், சர்க்கரை பொங்கல், லட்டு மற்றும் ஏழை பெண்களுக்கு கிரைண்டர் ஆகியவை வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+