சிமென்ட் விலை இன்று முதல் மூட்டை ரூ. 25 அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

பட்ஜெட்டில் சுங்கவரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், கட்டுமானத் தொழிலின் முக்கிய அங்கமான, சிமெண்ட் விலை இன்று முதல் மூடை ஓன்றுக்கு ரூ.25 வீதம் உயருகிறது.
பட்ஜெட்டில், சிமெண்ட்டுக்கு 2 சதவீதம் வரி உயர்வு அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த விலை உயர்வு.
சிமென்ட் வியாபாரிகளுக்கு நேற்று மாலை சிமென்ட் நிறுவனங்கள், எஸ்எம்எஸ் மூலம் விலை உயர்வுத் தகவலை தெரவித்துள்ளனராம்.
இந்த விலை உயர்வு இன்று (1ம் தேதி) முதல் இருக்கும் என வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள எஸ்எம்எஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிமென்ட் விலை மூடை ஓன்றுக்கு ரூ.255 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 25 ரூபாய் மூடைக்கு அதிகரிக்கப்படும் நிலையில் சிமெண்ட் மூடை ஓன்றின் விலை ரூ.280 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications