சம்பளதாரர்கள் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்?

Subscribe to Oneindia Tamil

Income Tax
சென்னை: 2010ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்படி, இனி மாத சம்பளம் பெறுவோர் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு என்பது பற்றிய ஒரு விளக்கம்:

வருமானவரி செலுத்து வோருக்கு ஆண்டு உச்ச வரம்பில் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பெண்களுக்கு ரூ 1.90 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்பதும், 65 வயதான மூத்த குடிமக்களுக்கான உச்சவரம்பு ரூ 2.40 லட்சம் என்ற நிலையும் தொடர்கிறது.

ஆனால், அதிக சம்பளம் பெறுவோருக்கு ஒரு சலுகை கிடைத்துள்ளது.

ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் இனி 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். (இதற்கு முன்பு வரை ரூ1.6 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவிகித வரி இருந்தது).

5 லட்சத்துக்கும் மேல் 8 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும், 8 லட்சத்துக்கு மேல் 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போல பெண்கள், மூத்த குடிமக்களுக்கும் வரி செலுத்தும் விகிதம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் மூலம் கிடைக்கும் பலன்கள் இவை:

-ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் ரூ.4,120 வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின்படி இனி ரூ.2,060 செலுத்தினால் போதும்.

-5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் முன்பு
ரூ. 35,020 ரூபாய் வரி செலுத்த வேண்டி இருந்தது. இனி அது ரூ.22,660 ஆகக் குறையும்.

-ரூ.8 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் முன்பு
ரூ.1,17,420 வரி செலுத்த வேண்டி இருந்தது. இனி இவர்கள் செலுத்த வேண்டிய வரி ரூ.72,100 தான்.

-ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் முன்பு 1 லட்சத்து 79 ஆயிரத்து 220 வரி செலுத்த வேண்டும். இனி 1 லட்சத்து 21 ஆயிரத்து 540 ரூபாய் செலுத்தினால் போதும்.

- ரூ.15 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 620க்கு பதிலாக ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 120 செலுத்த வேண்டும்.

-ரூ.20 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,19,120க்கு பதிலாக ரூ.4,67,620ம்,

-ரூ.25 லட்சம் வருமானம் உள்ளவர்கள் ரூ.6,73,620 செலுத்துவதற்கு பதிலாக ரூ.4,67,620மும்,

-ரூ.50 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள்
ரூ.14,46, 120க்குப் பதிலாக ரூ.13,94,620மும் செலுத்தினால் போதும்.

எவ்வளவு மிச்சமாகிறது...?

இந்த சலுகை மூலம் ரூ.3 லட்சத்துக்கு மேல் 5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் செலுத்தும் வரி ரூ.2 ஆயிரத்து 60 ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.

ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இனி வரி ரூ.12,360 குறையும். 8 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.45,420 குறைகிறது.

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.57,650 குறைந்துள்ளது. ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.51 ஆயிரத்து 500 வரிச்சலுகை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+