நூல் ஆலையில் நள்ளிரவில் தீ: பல லட்சம் மதிப்பு பஞ்சு சாம்பல்
கோபி: நூல் ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து சாம்பலாயின.
கோபி அருகே கொளப்பலூரில் தனியார் நூல் மில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று மாலை வேலை முடித்து தொழிலாளர்கள் வீடு திரும்பினர். நள்ளிரவு கடந்து 1.30 மணி அளவில் மில்லில் உள்ள பஞ்சு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அலறிஅடித்து வெளியேறினார்.
மில் உரிமையாளருக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் கோபி தீயணைப்பு நிலைய வண்டிகளுடன் போலீசார் விரைந்து வந்தனர்.
சத்தியமங்கலம், பெருந்துறை தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் 40 தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
விடிய விடிய தீ அணைக்கும் பணி நடந்தது. சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமாயின.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications