நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம்: சபாநாயகரிடம் விளக்கம்
சென்னை: கட்சித்தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்யுமாறு அதிமுகவால் கோரப்பட்ட இரு எம்எல்ஏக்களும் இன்று சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து 2 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 51 அதிமுக எம்எல்ஏக்களும் நேற்று சட்டமன்ற செயலாளர் செல்வராஜை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
இந் நிலையில் இன்று ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இருவரும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதில், நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம். அதிமுகவில் தொடரவே விரும்புகிறோம். உட்கட்சிப் பூசல் காரணமாகவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா செங்கோட்டையன் என்னிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, 2 எம்எல்ஏக்களும் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எம்.எல்.ஏக்கள், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் இன்று விளக்க மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர்.
அதில் 2 பேரும் அதிமுகவில் நீடிப்பதாகவும், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக தங்களைப் பற்றி மனு கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி பற்றிய குறைகளை கூறுவதற்காகவே தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்க மனு ஆய்வில் உள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications