அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் பொது இடத்தில் திடீர் ரகளை
சிதம்பரம்: சிதம்பரத்தில் மத்திய அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த போலீசார், துப்பாக்கியால் அடித்து கார் கண்ணாடியை உடைத்து டிரைவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி கடலூர் வழியாக காரைக்கால் சென்றார். அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையில் இருந்து கடலூர் மாவட்ட போலீசார் சுமோவில் பாதுகாப்புக்குச் சென்றனர்.
அப்போது, நந்தனார் பள்ளி அருகே அமைச்சரின் காரை அம்பாசிடர் கார் ஓவர்டேக் செய்துக் கொண்டு சென்றது.
அமைச்சரின் காரை தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரின் சுமோ கார், அம்பாசிடர் காரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மகேந்திரா ஜீப் மீது மோதியது.
இதில், போலீசார் சென்ற சுமோவின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சுமோவிலிருந்து இறங்கி, அந்த அம்பாசிடர் கார் கண்ணாடியை துப்பாக்கி கட்டையால் அடித்து உடைத்தனர்.
மேலும், டிரைவர் வைரக்கண்ணுவை தாக்கினர். அப்போது அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த மற்றொரு அம்பாசிடர் கார் டிரைவர் இஸ்மாயில், மக்கள் கூட்டம் ரோட்டில் திரண்டு இருக்கவே ஹாரன் அடித்தார்.
இதிலும், ஆத்திரமடைந்த போலீசார், அந்த கார் டிரைவர் இஸ்மாயிலையும் தாக்கினர். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரில் வந்த கர்ப்பிணி பெண்ணை வேறு காரில் அனுப்பி வைத்ததோடு, போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி. மூவேந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தார். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications