லாலு, முலாயம் ஆதரவு வாபஸால் பெரும் நெருக்கடியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு

ஆட்சிக்கான பெரும்பான்மை பலம் தற்போது வெறும் 3 எம்.பிக்கள் கூடுதல் என்ற இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தி்ல் நாட்களைத் தள்ளுவது மிகக் கடினம் என்பதால் லாலுவையும், முலாயமையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் இறக்கியுள்ளது.
ராஜ்யசபாவில் இன்று பெரும் அமளிக்கு மத்தியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே முலாயமின் சமாஜ்வாடிக் கட்சியும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் அரசுக்கு அளித்து வந்த வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலையை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவித்தனர்.
இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், அரசுக்கான மெஜாரிட்டி பலம் வெறும் 3 எம்.பிக்கள் கூடுதல் என்ற அபாயகரமான நிலையை எட்டியதால்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தற்போது 276 லோக்சபா எம்.பிக்கள் உள்ளனர். பட்ஜெட்டுக்கு லோக்சபா ஒப்புதல் அளிக்க 273 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதனால்தான் அரசு பீதியடைந்துள்ளது.
மெஜாரிட்டியை விட வெறும் 3 உறுப்பினர்கள் மட்டுமே கூடுதலாக இருப்பதால் அரசு பெரும் கவலை அடைந்துள்ளது.
லாலு, முலாயம் வசம் 26 லோக்சபா எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பட்ஜெட் தொடர்பாக பிரணாப் முகர்ஜியை லாலுவும், முலாயமும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மிகக் கோபத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் மகளிர் மசோதா வடிவில் அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளதால் இதை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளனர்.
இதனால் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அரசிடம் எழுந்துள்ளது.
லாலு - முலாயுடன் பேச்சு...
இதையடுத்து பிரணாப் முகர்ஜியிடம் லாலு, முலாயமை சமாதானப்படுத்தும் பொறுப்பை காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது. அவரும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.












Click it and Unblock the Notifications