மகளிர் மசோதா இன்றே நிறைவேறாததில் சோனியா அப்செட்
டெல்லி: சர்வதேச மகளிர் தினமான இன்றே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அது நடைபெறாமல் போனதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
சர்வதேச மகளிர் தினமான இன்றே, மகளிர் மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றி, அதே சூட்டோடு லோக்சபாவிலும் அடுத்த வாரத்திற்குள் கொண்டு வந்து நிறைவேற்றிட சோனியா காந்திதான் பெரும் ஆர்வத்துடன் இருந்தார்.
மகளிர் தினப் பரிசாக இந்திய பெண்களுக்கு இதை அளிக்கவும் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் இன்று நாடாளுமன்றத்தையே செயலிழக்க வைத்து விட்டனர் லாலு பிரசாத்தும், முலாயம் சிங் யாதவும்.
முலாயமை விட லாலு பிரசாத் யாதவ் படு ஆவேசமாக காணப்பட்டார். எங்களை மீறி நிறைவேற்றி விடுவீர்களா என்று படு ஆவேசமாக அவர் டிவிகளுக்கு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நில்லாமல், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் லாலுவும், முலாயமும் அதிரடியாக விலக்கிக் கொண்டிருப்பதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கலங்கடித்து விட்டது.
எதிர்ப்பு வரும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மாறிப் போகும் என அவர்கள் நினைக்கவில்லையாம்.
இன்றைய நிகழ்வுகளால் சோனியா காந்தி பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications