சிகாகோ அருகே இந்திய பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!
சிகாகோ: சிகாகோவில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன இந்திய பெண் ஒருவரின் சடலம் ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் மைனி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த இந்திய பெண் சங்கிதா கென் பட்டேல், வயது 32. இவர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி சங்கிதா திடீரென காணவில்லை. அன்றைய தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை.
கணவரிடமும் எந்த தகவலும் அவர் சொல்லவில்லை. இதற்கு முன் இதுபோன்று சொல்லாமல் சங்கிதா எங்கும் சென்றதில்லை என அவரின் கணவர் கூறியுள்ளார்.
சங்கிதாவுக்கு கணவருடன் எந்தவித குடும்பத் தகராறும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிகாகோ அருகே மில்வாகீ அவென்யூ என்ற இடத்தில் தேஸ் பிளைன்ஸ் நதியில் பெண் சடலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது.
நேற்று பிற்பகல் அதனை மீட்ட போலீசார், இந்த சடலம் சங்கிதா உடையது தான் என அடையாளம் கண்டனர்.
உடை, நகைகள் மற்றும் உடைமைகளை வைத்து குடும்பத்தாரும் சங்கிதாவின் அடையாளத்தை உறுதி செய்தனர்.
சங்கிதா தண்ணீரில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications