பழம் கிடைத்து விட்டது- யாருக்கு எத்தனை சுளைகள் என்பதை பிறகு முடிவு செய்வோம்: கருணாநிதி

ராஜ்யசபாவில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெரும் பரபரப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.
இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி அனுப்பியுள்ளார்.
அதில்,
பாராளுமன்ற மேல்-சபையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது எனக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்மூலம், இந்திய மகளிருக்கும் அதிகாரம் அளிப்பதில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் செழித்தோங்க புதிய வழி பிறந்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications