கர்நாடக அதிமுக உடைந்தது- புதுக் கட்சி தொடக்கம்- தொடங்கியவர்களை நீக்கிய ஜெ.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மார்ச் 28-ந்தேதி பெங்களூர் மாநகராட்சிக்கு நடைபெற உள்ள தேர்தலில் சிவிக் ஃபிரண்ட் என்ற அமைப்புடன் இணைந்து அதிமுக போட்டியிடுவதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வேறு எந்த கட்சியுடனோ அல்லது அமைப்புடனோ அ.தி.மு.க. கூட்டணி வைக்க வில்லை.
கர்நாடக மாநில கழக முன்னாள் அவைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் கர்நாடகா அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கி சிவிக் ஃபிரன்ட் என்ற அமைப்புடன் இணைந்துள்ளதாகவும், அந்த அமைப்பு 55 இடங்களில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அ.தி.மு.க.வுக்கும், கர்நாடகா அ.தி.மு.க. என்ற புதிய கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர்.கிருஷ்ணராஜ் கே.மூர்த்தி (பெங்களூர்), ஜி.அப்பு (பெங்களூர்) ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications