கோவாவில் ரஷ்யப் பெண் மர்ம மரணம்- கொலையா?
பனாஜி: ரஷ்யாவைச் சேர்ந்த 33 வயதுப் பெண் கோவா ஹோட்டலில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
வடக்கு கோவாவில், அரம்பரா என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் அவரது பிணம் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவரின் பெயர் எலினா. இவர் மட்டும் தனியாக தங்கியிருந்தார். நேற்று இரவு 10 மணியளவில் அவர் கடைசியாக மற்றவர்களால் பார்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தேசாய் கூறுகையில், இந்தப் பெண் டூரிஸ்ட் விசாவில் ஆறு நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். மார்ச் 24ம் தேதி ரஷ்யா திரும்புவதாக இருந்தார். இந்தியாவுக்கு இவர் தனியாகவே வந்துள்ளார் என்றார்.
இவரது அறையிலிருந்து எந்த சப்தமும் வராததால் குழப்பமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது அந்தப் பெண் இறந்து கிடந்தது தெரிய வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
கதவு உள்பக்கமாக மூடிக் கிடந்தது. இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர்தான் இதுகுறித்துத் தெரிய வரும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
கோவாவுக்கு ஆண்டு தோறும் 40 ஆயிரம் ரஷ்யர்கள் வருகிறார்கள். சமீப காலமாக ரஷ்யர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
சமீப காலமாக கோவாவில் நடைபெற்று வரும், வெளிநாட்டினருக்கு எதிரான குற்றச் செயல்களால் அதன் பெயர் பெருமளவில் கெட்டுப் போயுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய சிறுமி ஒருவரை ஒரு நபர் கற்பழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் ஒருவரின் மகன் மற்றும் கூட்டாளிகளால் கடத்தப்பட்டு கற்பழித்துக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஷ்யப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications