அணுஉலை இழப்பீட்டு மசோதா - ஆரோக்கிய விவாதத்துக்கு தயார்! - பிருத்விராஜ் சவுகான்
டெல்லி: அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதம் எழுப்பினால் அதைச் சந்திக்க அரசு தயார் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக, 'அணுஉலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா'வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு ரூ.2,500 கோடி வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.300 கோடி இழப்பீடு அளித்தால் போதும்.
மேலும், அதிகபட்ச மொத்த இழப்பீடு தொகை மத்திய அரசு, அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படும். இதுபோன்று, இழப்பீடு கோருவதற்கான கால நிர்ணயம் உட்பட பல்வேறு ஷரத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளன.
எனவே பாஜக, இடதுசாரிகள் மற்றும் பல்வேறு எதிர்கட்சிகளும் இந்த மசோதா நிறைவேறுவதை கடுமையாக கண்டித்து வருகின்றன.
ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. கடந்த வாரம் மசோதாவை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு பின்வாங்கியது.
இந்நிலையில், இதுபற்றி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் கூறுகையில், "இந்தியா தனது அணுசக்தித் துறையை பெருமளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான நேரமும் வாய்ப்புகளும் கைகூடி வந்துள்ளன.
அணுசக்தி இந்தியாவுக்கு மிகவும் அவசியத் தேவையானதாகவும் உள்ளது. எரிசக்தித் துறையில் நமது தேவைகளை நிறைவு செய்ய தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் பேசி வருகிறோம்.
இந்த நிலையில் அணு உலைகளின் மூலமாக நேரும் விபத்து தொடர்பான மசோதா நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், அணுசக்தி உற்பத்தி திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளே தாமதமாகும் நிலை ஏற்படும்.
எனவே நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு பொறுப்பான, நிஜமான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications