திருமணத்துக்கு மறுத்த காதலனின் முகத்தில் 'ஆசிட்' ஊற்றிய காதலி!
சென்னை: திருமணத்தை ஒத்திவைக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தன் காதலனின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் நடந்தது.
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார்.
இவர் தன்னுடன் படிக்கும் நிலாய் என்ற 20 வயது மாணவரை காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு நிலாய் வந்திருந்த போது, திருமணத்தை உடனடியாக நடத்த ஸ்ரீவித்யா வற்புறுத்தினார்.
சிறிது காலம் பொறுத்திருக்குமாறு நிலாய் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, அருகில் இருந்த 'ஆசிட்' பாட்டிலை எடுத்து நிலாய் முகத்தை நோக்கி வீசினார்.
இதில் படுகாயமடைந்த நிலாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், ஸ்ரீவித்யா தன்னை அறியாமல் தவறு செய்துவிட்டார் என்றும் பிரச்னையை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வோம் என்றும் நிலாய் கூறி புகார் ஏதும் தர மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications