திருவள்ளூரில் எச்ஐவி பாதித்த குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த பண்டிக்காவனூர் கிராமத்தில் ஆனந்த இல்லம் என்ற பெயரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் இயங்கி வருகிறது.
இங்கு 8 மாதங்களுக்கு முன்னர் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு மாத குழந்தையை மர்ம நபர்கள் விட்டுச் சென்றனர்.
இதையடுத்து, இக் குழந்தைக்கு மைதிலி எனப் பெயரிட்டு இந்த இல்லத்தைச் சேர்ந்தவர்களே பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், இக்குழந்தை நேற்று காலை திடீரென உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications