திருமணத்துக்கு முன் செக்ஸ் - உச்சநீதிமன்ற கருத்துக்கு ஆந்திர பீடாதிபதி கடும் எதிர்ப்பு
ஐதராபாத்: திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு ஆந்திர பீடாதிபதி ஸ்ரீவிஸ்வயோகி விஸ்வம்ஜி மகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று குறிப்பிட்டு கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அவரது கருத்து இளைய சமுதாயத்தை சீரழிப்பதாக உள்ளது எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் 22 கிரிமினல் வழக்குகள் குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி குஷ்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என கருத்து கூறினர்.
இதற்கு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பீடாதிபதி ஸ்ரீவிஸ்வயோகி விஸ்வம்ஜி மகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
'திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது இந்து மத தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது. எனவே நீதிபதிகள் கூறிய கருத்துக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் இருவரும் கற்புடன் இருப்பது அவசியம். இந்து தர்மப்படி திருமணத்தின் போது மணப்பெண் கன்னியாக இருக்க வேண்டும். நம் நாட்டில் காலம் காலமாக திருமண சடங்கின்போது கன்னியாதானம் அளிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டை பொறுத்தவரை பெண்கள் அனைவரும் கற்பு நெறி தவறாமல் இருக்கவே விரும்புகிறார்கள். கற்பு நெறி தவறும் பெண்கள் தான் கற்பு பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு நம் கலாச்சாரத்திற்கு வேட்டு வைத்து வருகிறார்கள்.
இதை அனைத்து இந்திய மக்களும் தட்டிக்கேட்க வேண்டும். இந்தியர்கள் புனிதமாக கருதும் திருமண உறவை கொச்சைப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இது இளைய தலைமுறையின் மனதில் விஷத்தை விதைத்து விடும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தவறான செக்ஸ் உறவை நியாயப்படுத்த கிருஷ்ணர் - ராதையை உதாரணமாக காட்டி உள்ளார்கள்.
இதற்கு இந்துமத பீடாதிபதிகள் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரி. இவர் சிறு குழந்தையாக இருந்தபோதே கோபியருடன் இருந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.
இதை வைத்து பார்க்கும் போது ஒரு குழந்தை தனது பெற்றோர், சகோதர- சகோதரிகளுடன் எந்த மாதிரியான அன்பு, பாசம் வைத்திருக்கிறதோ அதே போன்ற அன்பைத் தான் கிருஷ்ணன் வெளிப்படுத்தினார் என்று சொல்லலாம்.
ஆத்மார்த்தமான அன்பை போதிப்பதற்கு உதாரணமாகத்தான் ஸ்ரீகிருஷ்ணா-ராதையை கூறலாமே தவிர செக்சுடன் தொடர்புபடுத்தக் கூடாது.
திருமணத்திற்கு முந்தைய உறவு சட்டப்படி தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் இது இந்துமத தர்மப்படி மிகவும் தவறானது' என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஆந்திராவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளும் கற்பு பற்றிய உச்சநீதிமன்ற கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications