பெண் எம்.பிக்கள் அதிகரித்தால் இளம் எம்.பிக்கள் விசிலடிப்பார்கள் - முலாயம் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Mulayam Singh Yadav
லக்னோ: நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்தால், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களைப் பார்த்து இளம் ஆண் உறுப்பினர்கள் விசிலடிக்கும் நிலை ஏற்படும் என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

காங்கிரஸ், பாஜக, இடதுசாரி தலைவர்கள் முலாயம் சிங்கை கடுமையாக சாடியுள்ளனர்.

லக்னோவில் இதுகுறித்து முலாயம் சிங் யாதவ் கூறுகையில், இதைச் சொல்ல நான் விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். நாடாளுமன்றத்திலும், சட்டசபைளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், இளம் ஆண் உறுப்பினர்கள் அவர்களைப் பார்த்து விசிலடிக்கும், கேலி செய்யும் நிலை ஏற்படும்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மட்டும் அமலுக்கு வந்து விட்டால் ஆண்கள் யாருமே நாடாளுமன்றத்திற்கோ, சட்டசபைகளுக்கோ தேர்ந்தெடுக்கப்ட முடியாத நிலை ஏற்படும். காரணம், பெண்கள் ஒரு இடத்தில் அமர்ந்து விட்டால் பத்து ஆண்டுகளுக்கு அதைக் காலி செய்ய மாட்டார்கள். மேலும் அரசியல் கட்சியினரும் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆண்களை யாரும் மதிக்காத நிலை ஏற்படும் என்றார்.

முலாயமின் இந்தப் பேச்சுக்கு சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முலாயமின் வாதம் கொஞ்சம் கூட அர்த்தமற்றது. மேலும் பெண்களை தரம் தாழ்த்தி அவர் பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

மத்திய அமைச்சராக அவர் இருந்திருக்கிறார். முதல்வராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் இப்படிப் பேசியிருப்பது மிக மிக தவறு என்றார் காரத்.

இதேபோல பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்களும் முலாயமுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி கூறுகையில், இது மிகவும் மலிவான, தரக்குறைவான விமர்சனம். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சாமி பிரசாத் மெளர்யா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+