ஒகனேக்கல் திட்டம் – தமிழகம் குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய கர்நாடகா முடிவு
ஹூப்ளி: ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி மத்திய அரசிடம் புகார் கொடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் சட்டவிரோதமானது. இந்தத் திட்டம் பெரும் குழப்பத்துடன் கூடியது. எல்லைப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழகம் கூறுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இதற்கான அனுமதியை அது பெறவில்லை.
இதுதொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் பலமுறை புகார் கொடுத்தும் கூட மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
சர்ச்சைக்குரிய பகுதியில் விரிவான சர்வே நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ளலாம். அதுவரை அத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்ய அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளேன். மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை ஒகேனக்கல்லில் தமிழக அரசு மேற்கொள்ளும் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொள்வேன் என்றார் பொம்மை.
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஆயில் நிறுவனங்களின் ‘அதிர்ஷ்ட லாபத்திற்கு’ செக் வைத்த மத்திய அரசு.. ஏற்றுமதி வரி உயர்வு -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications