மு.க.அழகிரி, தயாநிதி மாறனின் செல்போன்களை ஒட்டு கேட்க உத்தரவா?

சென்னை அடையாரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திடம் இந்த உளவுப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று ஜாபர் சேட் மறுத்துள்ளார். அந்த சாப்ட்வேர் நிறுவனமும் இதை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல அமைச்சர் பூங்கோதைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலும் ஒட்டுக் கேட்கப்பட்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்னொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் சாப்ட்வேர் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு என்ற இயக்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளரான புகழேந்தி என்பவர் கூறுகையில், சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு வருகின்றன. இது அரசியல் சட்டத்தின் 19(1), 21 ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றார்.
இந்த ஒட்டுக் கேட்புப் பணியில் மு.க.அழகிரியின் செல்போன் எண்ணும் இடம் பெற்றிருப்பாதக கூறப்படுவதுதாதன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் தற்போது வாரிசுப் போர் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மு.க.ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையிலான அந்தப் போர் பகிரங்கமாக அவ்வப்போது வெடித்து வருகிறது.
இந்த நிலையில் அழகிரியின் செல்போன் ஒட்டுக் கேட்கப்படும் எண்களின் வரிசையில் இரு்பபதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி, தயாநிதி மாறன் தவிர தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், அதிமுகவின் மைத்ரேயன், பாமகவின் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளனவாம்.
தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனின் செல்போன் எண்ணும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட் உத்தரவின் பேரில் அடையாரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஜாபர்சேட்டும், அந்த நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications