மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு 3 அரசு வக்கீல்களையும் விசாரித்த எஸ்.ஐ.டி.

குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் நடந்த மிகக் கொடூரமான கொலைகள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம், 2 கட்டமாக விசாரித்தது எஸ்.ஐ.டி.
முதலில் பகலில் ஐந்தரை மணி நேரம் மோடியை விசாரித்த எஸ்ஐடி பின்னர் அவரை அனுப்பி வைத்தது. மீண்டும் இரவு 9 மணிக்கு மோடியை வரவழைத்த எஸ்.ஐ.டி. சுமார் நான்கரை மணி நேரம் விசாரித்தது.
இந்த நிலையி்ல் அன்றைய தினமே மோடி அரசால் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பான வழக்கில், மோடி அரசால், நியமிக்கப்பட்ட மூன்று அரசு வக்கீல்களையும் எஸ்ஐடி விசாரித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு அனுப்பிய பின்னர் இந்த மூன்று வக்கீல்களையும் வரவழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது. அந்த வக்கீல்கள் - வி.பி.ஆத்ரே, பியூஷ் காந்தி, எச்.எம். துருவ் ஆகியோர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இந்த மூன்று பேரும்தான் அரசு வக்கீல்களாக செயல்பட்டனர். இவர்களில் துருவ் மூத்த வக்கீலாவார்.
இவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்துள்ளது. இவர்கள் மீது தீஸ்தா செட்லவாத் என்பவர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று பேரையும் அழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது.
3 பேருக்கும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பாஜக ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளதா, தற்போதைய அரசுக்கு சாதகமாக இவர்கள் நடந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications