திருச்சி பெல் நிறுவனத்துக்கு ரூ.2,510 கோடி லாபம்!

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியது:
திருச்சி பெல் நிறுவனம் இந்த ஆண்டு ரூ.35,000 கோடி மதிப்புள்ள பணி ஆணைகள் பெற்றுள்ளது. பெல் குழுமத்தின் மொத்த விற்பனை ரூ.10,008 கோடியாகும். 2009-2010-ம் ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் ரூ.2,510 கோடி. இது கடந்த ஆண்டை விட 53 சதவிகிதம் அதிகமாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ரூ.250 கோடி செலவில் பெல் நிறுவனத்தின் புதிய பிரிவு அடுத்த ஆண்டு (2011) டிசம்பர் மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.
இந்த பிரிவு எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும். 1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் பெல் நிறுவனம் 2005-ம் ஆண்டிற்கான சிறந்த தொழிலக நல்லுறவு தமிழக அரசு விருதினை (இரண்டாம் பரிசு) பெற்றுள்ளது.
திருச்சி பெல்லின் அனைத்து பிரிவுகளும் கடந்த நிதி ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001 மறுசான்றிதழ் பெற்றுள்ளன.
மேலும் 510 தொழிலாளர்களும், 63 மேற்பார்வையாளர்களும், 124 அதிகாரிகளும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை வராது!
பெல்நிறுவனம் கடந்த ஆண்டில் 5518 மெகாவாட் அளவு அனல் மின்நிலைய உபகரணங்கள் நிறுவி இயக்கி வைத்துள்ளது. பானிபட், விசாகப்பட்டினம், முஸாபர்பூர், ரெய்ச்சூர், விஜயவாடா உள்பட 11 மின்நிலையங்களில் பெல் நிறுவனம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது.
நாட்டி மொத்த மின்திறனில் மூன்றில் இரண்டு பங்கு பெல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மின் திட்டங்கள் மூலமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வேலூர், சென்னை ஆகிய அனல் மின்நிலையங்களுக்கு பாய்லர் மற்றும் சாதனங்கள் தயாரித்து வருகிறோம். இதன் உற்பத்தி தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை வராது..." என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications