மீனாட்சி சுந்தரத்தின் 4 கூட்டாளிகளுக்கு சென்னை கோர்ட்டில் ஜாமீன் மறுப்பு
சென்னை: காலாவதி மருந்து வழக்கில் கைதாகியுள்ள மீனாட்சி சுந்தரத்தின் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
காலாவதி மருந்து வழக்கில் கைதான மீனாட்சி சுந்தரத்தின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவேந்தன், கிருபாகரன், விஜயக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்த்து. அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி, இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. மேலும், காலாவதி மருந்து விற்பனையில் கிடைத்த லாபத்தில் இந்த நான்கு பேருக்கும் பங்கு உள்ளது. இதை மீனாட்சி சுந்தரத்துடன் சேர்த்து இவர்களும் அனுபவித்துள்ளனர்.
எனவே இவர்களுக்கு ஜாமீன் தரக் கூடாது என்று வாதாடினார். இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, மீனாட்சி சுந்தரம் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து.
அப்போது அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மீனாட்சி சுந்திரத்தின் மனைவி சாத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், காலாவதி மருந்து வழக்கை மருந்துக் கட்டுப்பாட்டுதுறைதான் விசாரிக்க முடியும். காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் மீனாட்சி சுந்தரத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications