இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. மொத்தம் 225 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.
இதில் ராஜபக்சே கூட்டணி, சரத் பொன்சேகா கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியக் கூட்டணியாக உள்ளது.
இன்று காலை தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இன்றும் சில மணி நேரத்தில்வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியதும், ராஜபக்சே தனது சொந்த ஊரான ஹம்பந்தோட்டாவில் உள்ள பள்ளிக்கூட வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. காலே நகரில் நடந்த வன்முறையை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல வீடுகள், வாகனங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
திரிகோணமலை மாவட்டத்தில் இரு இடங்களில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் அச்சுறுத்தி மிரட்டுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
தேர்தலில் ராஜபக்சே கூட்டணியே வெல்லும் என இலங்கைக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications