வேலை நேரம் முழுக்க மது கிடைக்காத கோபத்தில் ஸ்டிரைக்கில் குதித்த ஊழியர்கள்!
கோபன்ஹேகன்: மதிய உணவு நேரத்தில் மட்டும்தான் மது குடிக்க வேண்டும்... அதுவும் பீர் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கோபமடைந்த டேனிஷ் மது தொழிற்சாலை ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்துள்ளனர்!
டேனிஷ் மது உற்பத்தி மற்றும் மொத்த இருப்பு கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் முன்பெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம், எந்த வகை மதுவையும் ருசி பார்க்கலாம் என்ற நடைமுறை இருந்தது. குறிப்பாக மதிய உணவு வேளையில் விரும்பிய மட்டும் குடிப்பார்களாம்.
வேலை செய்யும் இடத்துக்குப் பக்கத்திலேயே பீர் கூலர்களை வைத்து, அதில் ஏராளமான பீர் பாட்டில்களை வைத்திருப்பார்களாம். தண்ணீர் குடிப்பதைப் போல, வேண்டும்போது ஜில்லென்று குடித்துக்கொண்டே வேலை செய்வது அவர்கள் வழக்கமாம்.
ஆனால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாம் நிர்வாகம். ஒருவழியாக இப்போது கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. பணியிடத்தில் இருந்த பீர் கூலர்களை அப்புறப்படுத்திவிட்டார்களாம். அதேபோல, மதிய உணவின்போது குறிப்பிட்ட அளவு மட்டுமே பீர் தரப்படுகிறதாம்.
பல ஆண்டுகளாக கணக்கில்லாமல் குடித்துப் பழகிவிட்ட ஊழியர்கள் இதில் பயங்கர டென்ஷனாகிவிட்டார்களாம்.
இதனால் உடனடியாக ஸ்ட்ரைக்கை அறிவித்த அந்த தொழிற்சாலையின் 800 ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 250 பேர், இந்த வேலையே வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம்.
இந்த ஸ்ட்ரைக்கில் பீர் வேன் / லாரி ஓட்டும் டிரைவர்களும் இணைந்துள்ளனர். அவர்கள் ஓட்டும் லாரிகளில் பீர் பாட்டில்களை அடுக்கி பூட்டுப் போட்டுவிடுகிறதாம் நிர்வாகம். இதனால், தாகத்துக்கு பீர் குடிக்க முடியவில்லையே என்ற கோபத்தில் இந்த ஸ்ட்ரைக்கில் இறங்கிவிட்டார்களாம்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications