தேனிலவு கொண்டாட வருமாறு சானியாவுக்கு பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்வர் அழைப்பு

சானியா மிர்ஸாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் வருகிற 15ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது. முதலில் ஆயிஷா ரூபத்தில் பிரச்சினை வந்தது. பின்னர் பாகிஸ்தான் வீரரை எப்படி சானியா மணக்கலாம் என்று சிலர் பிரச்சினை கிளப்பினர். போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்னொரு புதுக் குழப்பமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜிட்- பல்திஸ்தான் பிராந்திய முதல்வர், சானியா தங்களது பகுதிக்கு வந்து தேனிலவைக் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
முன்பு இது வடக்குப் பிராந்தியம் என அழைக்கப்பட்டு வந்த்து. சில மாதங்களுக்கு முன்புதான் இதை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக கிலானி தலைமையிலான பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதுகுறித்து கில்ஜிட்- பல்திஸ்தான் முதல்வர் சையத் மெஹதி ஷா கூறுகையில், எங்களது மாகாணத்தில் வந்து சானியா- சோயப் தம்பதி தேனிலவைக் கொண்டாட வேண்டும். இதை அன்பு அழைப்பாக அவர்கள் ஏற்று இங்கு வர வேண்டும் என்றார்.
சானியா- சோயப் திருமணத்தை வைத்து காஷ்மீர்ப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்க முயல்வதாக இது கருதப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications