கி.மீக்கு ரூ.2.8 நஷ்டத்தில் ஓடும் அரசு பஸ்கள் - அமைச்சர் தகவல்
சென்னை: ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் 80 பைசா நஷ்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நேரு இதைத் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்,
'கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மொத்தம் 18 ஆயிரத்து 200 பேருந்துகள் இருந்தன. இன்றைக்கு மொத்தம் 20 ஆயிரத்து 230 பேருந்துகள் இருக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 2 ஆயிரம் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 12 ஆயிரத்து 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க மானிய கோரிக்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வருடத்தில் பழைய பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகளாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு பேருந்தின் வயது 7.8 என்று இருந்ததை கடந்த 4 ஆண்டு காலத்தில் 6.3 என்று குறைத்துள்ளோம்.
புதிய வழித்தடங்களை உருவாக்கும் போதும், புதிய பஸ்களை இயக்கும் போதும் வரவு-செலவில் நாகர்கோவிலில் மட்டும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 16 காசு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்தாலும் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு வருடம் தோறும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை முதல்வர் கருணாநிதி வழங்கிக்கொண்டு இருக்கிறார். பேருந்துகள் பிரேக்டவுன் ஆவதை நாங்கள் ஜீரோ சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
நகர பேருந்து என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.5,500 வசூல் ஆகவேண்டும். புறநகர் பேருந்து என்றால் ரூ.8,500 வசூல் ஆகவேண்டும்.
1500 மக்கள் இருக்கும் இடங்களில் சாலைகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து இப்போது 500 மக்கள் இருக்கும் இடங்களுக்கு சாலைகள் இணைக்கப்படுகின்றன. 150 மக்கள் இருக்கும் இடத்திற்கு கூட பஸ்கள் இயக்கவேண்டும் என்று அரசு அணை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து துறை என்பது லாபம் சம்பாதிக்கும் துறை அல்ல. மக்களுக்கு சேவை செய்யும் துறையாகும். இதனால் ஒவ்வொரு கிலோ மீட்டரை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 2 ரூபாய் 80 காசு நஷ்டத்தில் தான் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருக்கிறது' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications