ஹெட்லியை விசாரிக்க இந்தியாவுக்கு அனுமதி தரப்படும் – மன்மோகனிடம் ஒபாமா உறுதி

அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அதிபர் ஒபாமாவை, மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.
அப்போது ஹெட்லி விவகாரம் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர். 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, ஹெட்லியை இந்தியா விசாரிக்க அமெரிக்கத் தரப்பில் நிலவும் தாமதம் குறித்து பிரதமர் எடுத்துரைத்த்தாகத் தெரிகிறது.
அதற்கு இந்தியாவின் கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்த ஒபாமா, அமெரிக்க சட்டத்திற்குட்பட்டு நிச்சயம் அனுமதி தரப்படும் என உறுதியளித்தார். மேலும், அதில் காணப்படும் சட்டச் சிக்கல்கள் குறித்தும் அவர் பிரதமரிடம் விளக்கியதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் கூறுகையில், டேவிட் ஹெட்லி தொடர்பான இந்தியாவின் தேவையை ஒபாமா முழுமையாக உணர்ந்துள்ளார். அங்குள்ள சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்தார். லஷ்கர் இ தொய்பா, ஹபீஸ் சயீத், இலியாஸ் காஷ்மீரி ஆகியோரின் செயல்பாடுகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் அதிபர் அழுத்தமாக தெரிவித்தார்.
அணு தீவிரவாத்த்தின் அபாயம் குறித்தும் பிரதமரிடம் தனது கவலையை தெரியப்படுத்தினார் ஒபாமா.
ஆப்கானிஸ்தானில் இந்தியா ஆற்றி வரும் பணிகளை ஒபாமா வெகுவாகப் பாராட்டினார். இந்தியர்கள் செய்துள்ள தியாகங்களையும் அவர் பாராட்டினார் என்றார் ராவ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications