பஞ்சமி நிலங்களை மீட்க வழக்கு - சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி
நெல்லை: பஞ்சமி நிலங்களை மீட்க கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என சமூக சமத்துவபடை நிறுவனத் தலைவர் சிவகாமி தெரிவித்தார்.
நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ..
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் கடந்த 14ம் தேதி பஞ்சமி நிலமீட்பு கூட்டம் நடத்தினோம். பஞ்சமி நிலங்கள் அக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டு சும்மா இருக்க முடியாது. சிறுதாவூரில் அக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என முதல்வர் கருணாநிதி அன்று மாலை அறிவித்தார். இதுவரை பஞ்சமி நில மீட்பு குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 74 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. 1 லட்சம் பஞ்சமி நிலங்கள் குறித்த விபரங்கள் எங்களிடம் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரம் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். மே மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்குகள் நடத்தப்படும். பஞ்சமி நிலங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி சம்பந்தப்பட்டவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமூக நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
நிலம் இல்லாதவர்களுக்கு நிலம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பஞ்சமி நிலம் மீ்ட்பு, கோயில் நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்குவது, கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஓதுக்கீடு, போன்ற எங்கள் கட்சியின் முக்கிய அம்சங்களால் கவரப்பட்டு ஏராளமானோர் கட்சியி்ல் இணைந்து வருகின்றனர். கட்சி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என்றார் சிவகாமி.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications