2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை சந்திக்கத் தயார்: ஆ. ராசா
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கூறினார்.
2-ஜி அலைக்கற்றை உரிமத்தை மிகக் குறைந்த விலைக்கு அளித்ததால் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தற்போது சிபிஐ வழக்கு உள்ளது. இதுகுறித்து எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
சிபிஐ கோரும் அனைத்து தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, தேவையான ஆவணங்களை அளிக்கவும் எனது துறை தயாராக உள்ளது.
தற்போது 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல நடைமுறை முற்றிலும் வெளிப்படையானதாக நடத்தப்படுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் பிற துறைகள் ஏல நடைமுறையைக் கண்காணிக்கின்றன.
3-ஜி ஒதுக்கீடானது அரசின் கொள்கை முடிவில் ஒன்றாகும். இருப்பினும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சில சமூக பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உள்ளது.
தாமதம் ஏன்?:
3-ஜி ஏல நடைமுறை கால தாமதமானதற்கு ரேடியோ அலை வரிசை கிடைக்காததும், இத்துறையில் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததும் காரணமாகும்.
மேலும் கைவசம் உள்ள அலைக்கற்றை அளவு,இதில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய அளவு, நிர்ணயிக்க வேண்டிய தொகை போன்றவற்றை முடிவு செய்யவேண்டியிருந்ததன் காரணமாக ஏலம் தாமதமானது.
மேலும் அமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழு கடந்த ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது 3-ஜி ஏலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்குழு பலமுறை கூடி விவாதித்தது. இறுதியில் 3 கட்டங்களாக 17 சேவை பிராந்தியங்களில் இதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இம்மாதம் 9-ம் தேதி ஏலம் தொடங்கியுள்ளது.
3-ஜி ஏலம் மூலம் ரூ. 35 ஆயிரம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் நிறுவனங்களின் அதிக ஆர்வம் காரணமாக ரூ.45 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் தற்போது 2-ஜி மற்றும் 3-ஜி தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பம் நிலவுவது உண்மைதான். விரைவில் இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்றார் அமைச்சர் ராசா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications