சேலம் மத்திய சிறையில் மாறு வேடத்தில் வந்த நக்சலைட் கைது
சேலம் : சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியை பார்க்க மாறுவேடத்தில் வந்த நக்சலைட் டை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி ஷியாம்சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நக்சலைட் இயக்கத்தில் முன்பு தீவிரமாக செயல்பட்டவரும், ஆயுள் தண்டணை கைதியுமான ராதாகிருஷ்ணன் என்பவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் 24.4.1978 அன்று சிறையின் மதில் சுவர் மேல் ஏறி தப்பி சென்று விட்டார். இந்த வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு ராதாகிருஷ்ணன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சென்னை மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்ற அவர் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு பொது மன்னிப்பின்படி கடந்த 93 ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அரசு பொதுமன்னிப்பில் அவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்று கண்டறியப்பட்டது.
இதனால் அவரது பொதுமன்னிப்பு விடுதலையை ரத்து செய்து விட்டு மீண்டும் அவரை கைது செய்ய அரசு உத்தரவிட்டது.
போலீசார் தேடி வந்த நிலையில் கைதி ராதாகிருஷ்ணன் மாறுவேடத்தில் பார்வையாளரைப் போல சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதி கோபால் என்பவரை பார்கக வந்த போது கைது செய்யப்பட்டார்.
கைதி ராதாகிருஷ்ணனை மடக்கிப்பிடித்த சிறை அதிகாரி ராஜாமனோகரை பாராட்டி சிறைத்துறை சார்பில் ரூ 1000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications