மே 10ல் பிளஸ்-2 முடிவு, 20ம் தேதி எஸ்எஸ்எல்சி ரிசல்ட்
சென்னை: வரும் மே 10ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. பத்தாம் வகுப்பு முடிவுகள் 20ம் தேதி வெளியாகலாம்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. 6,89,687 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து சென்னை கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந் நிலையில் மருத்துவம், என்ஜினீயரிங் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளையும் கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன் கூட்டியே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதனால் மே 10ம் தேதியே முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
20ம் தேதி எஸ்எஸ்எல்சி முடிவுகள்
அதேபோல 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைந்துவிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,56,966 மாணவ- மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications