மே.வங்க காங். செயல் தலைவர் சுப்ரதா முகர்ஜி திரினமூலுக்குத் தாவல்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சிக்கு நேற்று பலத்த சரிவு ஏற்பட்டது. அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரதா முகர்ஜி, மீண்டும் திரினமூல் காங்கிரஸில் சேரப் போவதாக அறிவித்தார்.
ஏற்கனவே திரினமூல் காங்கிரஸில் இருந்தவர்தான் சுப்ரதா. ஆனால் மமதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மீண்டும் காங்கிரஸுக்குத் தாவினார். செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திரினமூல் காங்கிரஸுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளார் சுப்ரதா.
இதுகுறித்து அவர் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலில் திரினமூல் காங்கிரஸ் கட்சியுடன் இருந்து வந்த கூட்டணி முறிவதற்கு காங்கிரஸ் கட்சியின் அலட்சியப் போக்கே காரணம். மேலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தையும் காங்கிரஸ் சரிவர செய்யவில்லை. காங்கிரஸால் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட முடியாது.
மமதா பானர்ஜியைப் புறக்கணித்து விட்டு யாராலும் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டு வெல்ல முடியாது. மாவோயிஸ்டுகளின் பிடியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியை அகற்ற திரினமூல் காங்கிரஸும், காங்கிரஸும் பிரியாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடையக் காரணமே காங்கிரஸ்தான். அப்படிப்பட்ட கட்சியில் இருக்க விரும்பவில்லை என்றார் சுப்ரதா.
ஏற்கனவே கொல்கத்தா மேயராக சுப்ரதாவை ஆக்கியவர் மமதா. தற்போது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சுப்ரதா கட்சி தாவியுள்ளதால் மீண்டும் அவரை மேயராக்கும் திட்டம் திரினமூலிடம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications