கொல்லத்தில் பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸ்வரம் முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள்
கொல்லம்: கொல்லம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்து பிடிபட்ட ஈழத் தமிழர்கள் ராமேஸவரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
38 ஈழத் தமிழர்கள் சில நாட்களுக்கு முன்பு கொல்லத்தில் வைத்து பிடிபட்டனர். 5 பேர் பெண்கள். அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஒரு டிராவல் ஏஜென்ட் வரச் சொன்னதாக விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களுக்குப் போலியான ஆவணங்கள் தயாரித்து இவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டென்னிஸ் என்கிற குமாரை கேரள போலீஸôர் கைது செய்தனர்.
இவரிடம் விசாரணை செய்ததில் இலங்கைத் தமிழர்களுக்கு வெளிநாடு செல்ல போலியான விசா உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து அளித்தது தெரியவந்தது. 38 பேரில் சிலர் ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருந்து கொல்லம் வந்துள்ளனர். சிலர் விமானம் மூலம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா செல்வதற்காக லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. பெண்கள் அனைவரையும் லாட்ஜிலேயே தங்கவைத்து விட்டு, ஆண்களிடம் மட்டும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் டென்னிஸ் மட்டும் கைது செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த 5 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணைக்குப் பின்னர் அனைத்துத் தமிழர்களும் ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications