விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீடித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்புக்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. போர் முடிந்து விட்டது, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்துப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று கடந்த ஆண்டு மே 18ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
இருப்பினும் பிரபாகரன், பொட்டு அம்மான் மரணங்கள் தொடர்பாக தொடர்ந்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கேற்றபடி இந்த இருவரின் மரணச் சான்றிதழ்களையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவிடம் அளிக்காமல் உள்ளது.
இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் கடந்த 1992ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications